Connect with us

4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆபாச நடிகர் மீது குற்றச்சாட்டு

செய்திகள்

4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆபாச நடிகர் மீது குற்றச்சாட்டு

ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்ற பிரபல ஆபாச பட நடிகர் ரான் ஜெர்மி என்பவர் நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பெரும் பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது

ஆபாச பட உலகில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ரான் ஜெர்மி, கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான ஐந்து வருட கால கட்டத்தில் 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு 25 வயதான இளம்பெண் ஒருவரை தனது வீட்டில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் முதலில் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு 2 பெண்களையும், 2019ஆம் ஆண்டு ஒரு பெண்ணையும் அவர் அதேபோல் வீட்டுக்கு வரவழைத்து வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளதாக் இந்த புகார்களிடன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரான் ஜெர்மி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 90 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

Continue Reading
To Top