Connect with us

பொன்னியின் செல்வனை வெப் சீரிஸ் ஆக தயாரிக்க செளந்தர்யா முயற்சி

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வனை வெப் சீரிஸ் ஆக தயாரிக்க செளந்தர்யா முயற்சி

கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவல் பொன்னியின் செல்வன் இதில் வரும் கதாபாத்திரங்கள் அதிகமான கதாபாத்திரங்களாகும். வந்திய தேவன், ஆழ்வார்கடியான், நந்தினி என இதில் நிறைய கதாபாத்திரங்கள் உண்டு.

பல வருடங்களாக இக்கதையை படமாக தயாரிக்க பலரும் முயன்று வருகின்றனர். தூர்தர்ஷனில் கூட இதை தொடராக தயாரிப்பதாக ஆரம்ப காலங்களில் செய்தி வந்தது பின்பு அதுவும் நின்று போனது.

இந்நிலையில் மணிரத்னம் இப்படத்தை இயக்க இருப்பதாகவும் விஜய், விக்ரம் உள்ளிட்டவர்களுக்கு மேக்கப் டெஸ்ட் நடந்ததாகவும் இணையதளங்களில் செய்தி வெளியானது. இருப்பினும் எதுவும் நடக்கவில்லை.

எல்லோரும் அறிவித்து விட்டு செயல்படுத்த முடியாமல் போவதற்கு காரணம் மிகவும் அதிகமான பிரமாண்டம். ஒரு கதையை தொட்டு வரும் கிளைக்கதைகள் என இதை நாவலாக மட்டுமே படிக்க உகந்தது.

இருப்பினும் படத்தை தயாரிக்க முடியவில்லை. இந்நிலையில் இதை செளந்தர்யா ரஜினிகாந்த் வெப் சீரிஸ் ஆக தயாரிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இருந்தாலும் இதுவும் நிறைவேறுமா என தெரியவில்லை. இந்த நாவலை அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுப்பதென்பது குதிரைக்கொம்பான விஷயம் மிகவும் கஷ்டம் என நாவலை உருகி உருகி படித்தவர்களுக்கு தெரியும்.

அப்படியே படமாக்கினாலும் நாவலின் சுவை வருமா என தெரியவில்லை.

Continue Reading
To Top