பொள்ளாச்சி விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக பெரிதாக்க வேண்டாம்- கமல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக யாரும் ஊதி பெரிதாக்க வேண்டாம் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால், பொள்ளாச்சி மக்களிடையே பெரும் பதட்டம் நிலவி கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். காவல்துறை செய்ய வேண்டிய நடவடிக்கைகளை நிச்சயம் செய்யும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.