பொள்ளாச்சி சம்பவம்- தூக்கம் வரவில்லை- வைரமுத்து

அலெக்ஸ், அஞ்சலி நடித்துள்ள நெடுநல்வாடை என்ற படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார்.

இதில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து அவர் பேசியதாவது.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் தூக்கத்தை கெடுக்கிறது. நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் நடந்துள்ளது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை.


அந்த மிருகங்களை சரிப்படுத்ததான் கலை. அந்தக் கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. நெடுநல்வாடை வணிக ரீதியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி.