Connect with us

பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த ஒரே ஒரு பெண்ணுக்கு காவல் இருந்த போலீஸ்

செய்திகள்

பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த ஒரே ஒரு பெண்ணுக்கு காவல் இருந்த போலீஸ்

சாத்தான்குளம் தந்தை மகன் மரணமடைந்த விவகாரம் காரணமாக காவல்துறையின் பெயரே ஒரு பக்கம் டேமேஜ் ஆகி கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் நல்ல போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது

சேலம் பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த ஒரே ஒரு பெண்ணுக்காக காவல்துறை அதிகாரி ஒருவர் விடிய விடிய அந்த பெண்ணுக்கு காவல் காத்துக் கொண்டிருந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது

தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் ஒரு பெண் பெங்களூரில் இருந்து நேற்று இரவு சேலம் வந்தார். இன்று முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அவருக்குத் தெரியாததால் அவர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் அந்தப் பக்கமாக ரோந்து வந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தான் பேருந்துக்காக காத்திருப்பதாகவும் தன்னை உறவினர் ஒருவர் அழைத்துச் செல்ல வருவார் என்றும் கூறியுள்ளார்

இதனை அடுத்து அந்தப் பெண்ணுக்காக இரவு முழுவதும் அந்த காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் விடிந்த பின்னரும் உறவினர் யாரும் வரவில்லை என்பதால் காவல்துறையினர் பத்திரமாக அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று உறவினர்களிடம் பத்திரமாக சேர்த்த பின்னரே காவலர்கள் வீடு திரும்பினார்

ஒரு பக்கம் காவல்துறையினர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தாலும் இன்னொரு பக்கம் காவல்துறையினர் மக்களை பாதுகாக்கும் பணியில் சின்சியராக ஈடுபட்டு வருகிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே இந்த சம்பவம் நிரூபித்துள்ளது

Continue Reading
To Top