என் மகனை சுட்டு கொன்றுவிடுங்கள்: ஒரு தாயின் கண்ணீர் கதறல்

நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் ரவுடி கும்பல் ஒன்றை போலீசார் சுற்றி வளைத்த போது ரவுடிகள் தாக்கியதில் 8 போலீஸ்காரர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தியை இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான விகாஷ் துபே என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் விகாஷ் துபே தாயார் எனது மகனை தயவு செய்து சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சிறுவயதிலிருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அரசியல்வாதிகளின் தொடர்பு கொண்ட பிறகு கொலை கொள்ளை செய்து வருவதாகவும் கூறிய விகாஷ் துபேதாயார் நேற்று நடந்த சம்பவம் என்னை மிகவும் உலுக்கி விட்டது என்றும் அப்பாவி போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற என் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

விகாஷ் துபேவால் நாங்கள் இன்னும் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்

1993 ஆம் ஆண்டு வழிப்பறி மூலம் தனது குற்றத்தை தொடங்கிய விகாஷ் துபே அதன் பிறகு கொலை முயற்சி, கொலை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்செயல்களைச் செய்துள்ளார். இவர் மீது மொத்தம் 60 குற்ற வழக்குகள் உள்ளன என்பதும் அதில் ஆறு கொலை வழக்கு என்பது குறிப்பிடப்பட்டது

இந்த நிலையில் விகாஷ் துபேவை எப்படியாவது பிடிக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் தீவிர முயற்சியில் உள்ளனர்