நடிகர் சித்தார்த் மீது புகார் கொடுத்த பாஜக நிர்வாகி

நடிகர் சித்தார்த் இவர் கடந்த சில நாட்களாக டுவிட்டரில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். சில மாதங்களுக்கு முன் கடுமையான டுவிட்களை இவர் தட்டி இருந்தார் அதற்கு பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிறிது நாட்கள் இடைவெளி விட்ட சித்தார்த் தற்போது மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்காக ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் சித்தார்த்துக்கு பாரதிய ஜனதா பிரமுகர்களிடம் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இவர் குறிப்பாக மோடி அமித்ஷாவை தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள் சித்தார்த்தை கண்டித்து இருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக நாராயணன் திருப்பதி சித்தார்த்துக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.