Connect with us

கர்நாடக எல்லையில் தடியடி: அடித்துவிரட்டப்பட்ட தமிழர்கள்

செய்திகள்

கர்நாடக எல்லையில் தடியடி: அடித்துவிரட்டப்பட்ட தமிழர்கள்

கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்ற தமிழர்களை அம்மாநில போலீசார் தடியடி நடத்தி அடித்து விரட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கர்நாடகாவில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் அண்டை மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகளை மூடியுள்ளது. மேலும் சென்னை மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு நுழைபவர்கள் கண்டிப்பாக ’சேவா சிந்து’ என்ற செயலியில் பதிவு செய்த வேண்டும் என்றும் அதில் ஒப்புதல் கிடைத்தவர்கள் மட்டுமே கர்நாடக மாநிலத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒப்புதல் கிடைத்தாலும் மூன்று நாட்கள் அரசு கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் நேற்று ஓசூர் எல்லையில் தமிழர்கள் சிலர் நடந்து கர்நாடக மாநில எல்லைக்கு செல்ல முயன்றதாக தெரிகிறது. அவர்களிடம் சேவா சிந்து செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று போலீசார் கூறியதாகவும் அதற்கு தமிழர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது

இதனையடுத்து கர்நாடகா போலீசார் லேசான தடியடி நடத்தி தமிழர்களை தமிழக எல்லைக்குள் விரட்டி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் தமிழர்களை தங்கள் மாநில எல்லைக்குள் நுழையவிடக்கூடாது என்பதில் கர்நாடக மாநிலம் மிக தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கு செயல்படத் தொடங்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top