நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக நாளை தமிழகம் வருகிறார். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்துக்காக நாளை தமிழகம் வருகிறார்.

நாளை காலை 11 மணியளவில் தமிழகம் வரும் பிரதமர் மோடி இராமநாதபுரம் வருகிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சி மற்றும் பாரதிய ஜனதா இராமநாதபுரம் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசுகிறார்.

பின்பு அங்கிருந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி செல்லும் மோடி அங்கு தேனி அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்தை ஆதரித்து பேசுகிறார்.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.