பிரதமர் மோடியை ஸ்டேட்டஸ் போட்டு கலாய்த்த திவ்யா ஸ்பந்தனா

நேற்று இராமநாதபுரம் மற்றும் தேனியில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.இதில் இராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமருக்கு வில் அம்பு பரிசாக வழங்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி அம்பை மாற்றி பிடித்திருப்பது போல ஒரு புகைப்படம் வைரலாகி நெட்டிசன்களின் காமெடிக்கு உள்ளாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை திவ்யாவும் விட்டு வைக்கவில்லை.ஏற்கனவே மோடியை எதிர்த்து பல முறை ஸ்டேட்டஸ் போட்டு வம்பில் சிக்கியவர் இவர்.

இந்த புகைப்படத்துக்கு அவர் கூறி இருப்பதாவது.

அங்கிள், எது முக்கியமானது என்பதில் கவனம் செலுத்துங்கள். சிறிது நேரமாவது கேமராவைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பாருங்கள். கேமரா உங்களுடைய நண்பன் கிடையாது. கேமராவுடனான உறவை முறித்து கொள்ளுங்கள். கடவுள் ராமரும் சந்தோஷமாக இல்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.