Connect with us

தமிழர்களின் பிரச்சினைக்கு முதலில் செவிசாய்ப்பது நாங்கள்தான் – மோடி

செய்திகள்

தமிழர்களின் பிரச்சினைக்கு முதலில் செவிசாய்ப்பது நாங்கள்தான் – மோடி

சென்னை கிளாம்பாக்கத்தில் கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியது.


நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தில் இருக்கிறோம். செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி, தமிழ் மொழி மிக அழகானது. சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்ஜிஆர் ரயில் நிலையமாக அழைக்கப்படும். சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் செய்யப்படும்.

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான்.


யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மத்திய அரசு சார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும். ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் நகரங்களை இணைத்து, பயண நேரங்களை குறைக்கும்.


இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் நோக்கம். தமிழகத்தில் அமையும் பாதுகாப்பு தொழில்பூங்கா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.


தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 66 நாடுகளுடன் இ-விசா வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மோடியை வசைபாடுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி. என்னை சிலர் திட்டுகிறார்கள். சிலர் என் ஏழ்மையை திட்டுகிறார்கள். சிலர் என் குடும்பத்தை வசைபாடுகிறார்கள்.


சிலர் என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள். பரவாயில்லை, நான் மக்களுக்காக வாழ்கிறேன். மக்களுக்காக நான் ரத்தம் சிந்த தயார். மக்களுக்காக நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top