பிரதமர் மோடி அத்திவரதரை காண வருகை

உலக புகழ்பெற்ற அத்திவரதர் தரிசனம் நடந்து வருகிறது. 48 நாட்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. அதுவும் நாற்பது வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இது பெரு நிகழ்வாகும். பல மாவட்ட போலீசார். தடையில்லா குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மிகப்பெரும் விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழாவை காண பல லட்சம் பக்தர்கள் வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் காஞ்சிபுரம் வருகிறார். அங்குள்ள பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு உள்ளது. அங்குதான் பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்.

வரும் 23ம் தேதி பிரதமர் காஞ்சிபுரம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.