30ம் தேதி பிரதமராக பதவியேற்கும் மோடி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது பாரதிய ஜனதா கட்சி. இதனால் தனிப்பெரும்பான்மை பெற்று மிக அசுர பலத்துடன் ஆட்சியமைக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

இந்நிலையில் வரும் 30ம் தேதி வியாழக்கிழமையன்று பிரதமராக மோடி பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, பாஜக எம்பிக்களின் பட்டியலை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்பேரில் குடியரசு தலைவரும் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். வரும் 30ம் தேதி இரவு ஏழு மணியளவில் பிரதமராக மோடி பதவி ஏற்கிறார்.