Connect with us

பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஒருசில பாடங்கள் தவிர பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாக பிளஸ் 2 தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘ஜூலை முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.

மேலும் கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது என்றும், இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஜூலையில் ரிசல்ட் வந்தால் தான் மாணவர்கள் கல்லூரியில் சேர வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கொரோனா காரணமாக வேதியியல் உள்ளிட்ட பாடங்கள் எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கபடும் என்று ஏற்கனவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top