திட்டமிட்டபடி பேய்மாமா படப்பிடிப்பு தொடரும்- இயக்குனர் ஷக்தி சிதம்பரம்

வடிவேலு நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் பேய்மாமா. இதில் வித்தியாசமான வேடத்தில் குழந்தைகளை கவரும் வகையில் வடிவேலு கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங்குக்கு முன்பே இப்படத்தில் வடிவேலு நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் என்னவென்றால் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகி சில சூழ்நிலைகளால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பதால் படம் கிடப்பில் உள்ளது. இதை தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு கொண்டு சென்றிருப்பதால் பேய் மாமா படத்தில் வடிவேலு நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கம் கூறி வருகிறதாம்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில் வடிவேலுக்கும் எனக்கும் 18 ஆண்டு கால பழக்கம் உள்ளது. என்னம்மா கண்ணு காலத்தில் இருந்தே நட்பு தொடர்கிறது. எது எப்படி இருந்தாலும் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு தொடரும் என ஷக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.