Connect with us

பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விவரங்களை அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ்

பொழுதுபோக்கு

பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விவரங்களை அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ்

ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார்.முதல் கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடந்தது. விடுதி வார்டனாக நடிக்கும் ரஜினி இரவில் சமூக விரோதிகளை களை எடுக்கும் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் மிக இளமையான ரஜினியை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பார்க்க முடிந்தது.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு வரும் டிசம்பர் 9ல் வெளியாவதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

முதல் சிங்கிள் டிராக் டிசம்பர் 3லும் இரண்டாவது சிங்கிள் டிராக் டிசம்பர் 7ம் தேதியும் வெளிவரவிருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top