Connect with us

இன்று முதல் அருண் ஜெட்லி மைதானமாக பெரோஸ் ஷா கோட்லா மைதானம்

விளையாட்டு

இன்று முதல் அருண் ஜெட்லி மைதானமாக பெரோஸ் ஷா கோட்லா மைதானம்

கடந்த மாதம் இயற்கை எய்தினார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.  மிகச் சிறப்பாக நிதித் துறையில் செயல்பட்டுவந்த இவர், 2019 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தாக்கல் செய்ய முடியவில்லை, அதன்பின்னர் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் கூட இவரால் தாக்கல் செய்யமுடியாது என்பதால் விலகிவிட்டார்.

புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியினை ஏற்றதோடு, புதிய பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.

தற்போது அருண் ஜெட்லி  மறைவிற்குப் பின், கிரிக்கெட் மைதானம் ஒன்றிற்கு இவருடைய பெயர் மாற்றப்படவுள்ளது. அதற்கு பின்னணி என்ன? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர், அதற்குக் காரணம் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 4 ஆண்டுகள் இருந்துள்ளார்.


டெல்லி பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியம் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது, டெல்லி கிரிக்கெட் வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்த அருண்ஜெட்லியின் பெயரை, டெல்லி பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியத்துக்கு சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. அது இன்று முதல் அருண்ஜெட்லி மைதான, என்றே அழைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top