மோடி ஆட்சியில்தான் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்- அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், மக்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளனர் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். மத்தியபிரதேச மாநிலம் ஷாடோல் பகுதியில், பா.ஜ., சார்பிலான வாகனப்பேரணியை, அமித் ஷா துவக்கிவைத்தார்.

அவரும் ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகனத்திலும் பயணித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமித் ஷா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மக்களின் நலனில் ஒருபோதும் அக்கறை கொண்டதில்லை என்றார்.

பாகிஸ்தான் உடனான விவகாரங்களில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கைகள், மக்களுக்கு ஒருபோதும் திருப்திகரமாக இருந்ததில்லை என்றும் தெரிவித்தார். இன்று பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை ஆதரிக்க யாரும் தயாரில்லை. இந்த வகையான இராஜதந்திர வெற்றியை பிஜேபி நரேந்திர மோடி அரசாங்கம் கொண்டு வந்தது என்றார்.