பெண்களின் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?!


சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு நன்மையை கொடுக்கும். சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். பெண்கள் குங்குமத்தை, தான் இட்டுக்கொண்ட பிறகே, மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். . திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற்போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும். குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது

புருவ மத்தியில், மூளையின் முன்புறம் பைனீயல் கிளாண்ட் என்னும் சுரப்பி உள்ளது. யோக சாஸ்திரத்தில் இதனை “ஆக்ஞா சக்கரம்’ என்பர். இதனைக் குளிர்ச்சிப்படுத்தவே விபூதி, சந்தனம், குங்குமம் இடுகிறோம். நெற்றியில் இடும் பொட்டை “நெற்றித்திலகம்’ என்பர். “திலம்’ என்றால் “எள்’. அளவில் சிறிதாக எள்ளைப் போல இட்டுக் கொள்வதால் “திலகம்’ என்று பெயர் வந்தது. அக்காலத்தில், அரசர்கள் சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களாலான சாந்தை நெற்றியில் வரைந்து கொள்வர். இதற்கு “திலக தாரணம்’ என்று பெயர். பூக்கள், பாம்பு, திரிசூலம் போன்ற வடிவங்கள் இதில் இடம்பெறும். தாமரைமலர் வடிவம் இதில் சிறப்பானது.

இத்தனை சிறப்புவாய்ந்த குங்குமத்தை இட்டுக்கொள்ளாமல் ஸ்டிக்கர் பொட்டுக்கு இன்றைய பெண்கள் மாறியது வேதனையே!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.