Connect with us

பிசி ஸ்ரீராமின் அடுத்த படம்

பொழுதுபோக்கு

பிசி ஸ்ரீராமின் அடுத்த படம்

பிசி ஸ்ரீராம் ஒரு காலத்தில் புகழ்பெற்ற படங்களின் ஒளிப்பதிவாளர். சினிமாவில் அனைவராலும் விரும்பப்படும் ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவாளர்கள் எல்லாம் இயக்குனர்கள் ஆனார்கள் என்ற சினிமா வரலாற்றுக்கேற்ப இவரும் ஒரு காலத்தில் இளையராஜா இசையில், விக்ரம், ஐஸ்வர்யா நடிப்பில் மீரா படத்தை இயக்கினார்.

மேலும் கமல், அர்ஜூன் நடிப்பில் புகழ்பெற்ற குருதிப்புனல் படத்தையும் இயக்கினார்.

அபூர்வ சகோதரர்கள், நாயகன்,மெளனராகம், தேவர் மகன், போன்ற புகழ்பெற்ற படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் தற்போது உதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சைக்கோ படத்தில் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதற்கு அடுத்து யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நானி ஹீரோவாக நடிக்க உள்ளார்.

https://twitter.com/pcsreeram/status/1069250980879847424

Continue Reading

அதிகம் படித்தவை

To Top