Connect with us

7 நாட்களில் கொரோனாவை குணமாக்கும் பதஞ்சலி மருந்து: பாபா ராம்தேவ் தகவல்

செய்திகள்

7 நாட்களில் கொரோனாவை குணமாக்கும் பதஞ்சலி மருந்து: பாபா ராம்தேவ் தகவல்

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், மனித இனத்தையே கொரோனா வைரஸ் ஆட்டுவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த கொரோனா வைரஸை குணப்படுத்தவும் வைரஸ் தாக்காமல் இருக்க தடுப்பு ஊசி கண்டுபிடிக்கவும் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இதற்கான கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்து விட்டதாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விளம்பரம் செய்தது. இது குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் பேட்டி அளித்த பதஞ்சலி பாபா ராம்தேவ் பதஞ்சலி மருந்து மூலம் 7 நாட்களில் கொரனோ நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இந்த மருந்தை சோதனை செய்தது தொடர்பான ஆய்வு ஆவணங்கள் ஆயுஷ்மான் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் பதஞ்சலியின் மருந்து மூன்று நாட்களில் 67 சதவீத கொரோனா நோயாளிகளை குணமாக்குகிறது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்

சற்றுமுன் ஹரித்துவாரில் செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ் மற்றும் அவரது நிர்வாகிகள் பதஞ்சலி மருது குறித்து மேலும் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்கள்

பதஞ்சலியின் இந்த விளக்கத்தை ஆயுஷ்மான் அமைச்சகம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப் போகிறது என்றும் கொரோனா நோயை குணப்படுத்த இந்த மருந்துகளை பயன்படுத்தலாம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Continue Reading
To Top