குருநாதருக்கு வித்தியாச வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்

இயக்குனர் கே.பாக்யராஜின் பிறந்த நாள் நேற்று. இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் போட்டி போட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் வித்தியாசமான வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

பாக்யராஜிடம் தாவணிக்கனவுகள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பார்த்திபன் .குருநாதர் என்ற அடிப்படையில் வித்தியாசமான வாழ்த்தை தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

இப்புகைப்படத்தை பிரகாசமாக்க சில பில்டர்ஸ் தரப்பட்டுள்ளது. என் வாழ்வின் துயரங்களை வடிகட்டி வெளிச்சம் மட்டும் தங்கச் செய்தவர்… என பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.