Connect with us

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிறப்பு பரிசு கொடுத்த நடிகர் பார்த்திபன்

செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிறப்பு பரிசு கொடுத்த நடிகர் பார்த்திபன்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா வைரசுக்கு எதிராக இரவு பகலாக போராடி வருகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு அதிரடி நடவடிக்கையும் தமிழக மக்களை காக்கும் வகையில் உள்ளது. இதனால் அவரை எதிர்க்கட்சி தலைவர்கள் கூட பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை நேற்று நேரில் சந்தித்தார் நடிகர் பார்த்திபன். அப்போது மரியதை நிமித்தமாக மலர்க்கொத்து கொடுப்பற்கு பதிலாக 5 லிட்டர் சானிடைசர் கேன் ஒன்றை கொடுத்துள்ளார்

இதுகுறித்து பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.பொக்கே கொடுப்பதற்கு பதிலாக சானிடைசர் 5 லிட்டர் கேன் ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்க மக்களின் சார்பில் வழங்கினேன். இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன் அந்த யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top