நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

விரைவில் பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் கடந்து முடிவதையொட்டி நாடாளுமன்ற தேர்தல் வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில் சில நாட்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இரண்டு வாரங்கள் ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது. இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கிறது.

வரும் ஏப்ரல் 18ல் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இருக்கிறது.

மே மாதம் வரை பல கட்டமாக இந்த தேர்தல் நடக்கிறது.

மே 23 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.