லைக்காவின் அனைத்து படங்களுக்கும் தடையா? ’இந்தியன்2’ ’பொன்னியின் செல்வன்’ கதி என்ன?


acdfe0234b50bec15cb353c71e638466

லைக்கா நிறுவனம் தற்போது கமலஹாசனின் ’இந்தியன்2’ மற்றும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கிட்டத்தட்ட இந்நிறுவனம் தமிழ் சினிமாவில் மட்டும் ரூபாய் ஆயிரம் கோடி முதலீடு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேரளாவில் உள்ள பாலக்காடு விநியோகஸ்தர் சங்கம் திடீரென லைக்காவின் அனைத்து படங்களுக்கும் தடை விதித்துள்ளது கேரளாவில் லைக்காவின் தடை படங்களை திரையிட விடமாட்டோம் என இச்சங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த தடை வரும் 21ஆம் தேதி வெளிவரும் மாஃபியா’ திரைப்படத்திலிருந்து தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த தடை காரணமாக கேரளாவில் இனி லைகா நிறுவனங்களின் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews