பஸ் போக்குவரத்தினையும் ரத்து செய்த பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த பிரிவு 370 சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட அந்தஸ்தால், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் காஷ்மீர் மாநிக அந்தஸ்தை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எழுந்த பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, பிரதமர் நாட்டு மக்களுக்காக உரை ஆற்றினார், பலவிதமான சலுகைகளை  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் கிளம்பிய பிரச்சினைகள் அனைத்தும் ஓரளவு அடங்கியது.

 

பஸ் போக்குவரத்தினையும் ரத்து செய்த பாகிஸ்தான்!


ஆனால் இதனை சற்றும் ஜீரணிக்க முடியாத, பாகிஸ்தான் எதையாவது செய்து நிம்மதியைக் கெடுப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. அதாவது, இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான வர்த்தக உறவை முதலில் துண்டித்தது, இந்தியாவுக்கான தூதரை நாட்டிற்குன் அழைத்துக் கொண்டது.

பின்னர் ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என திட்டவட்டமாக அறிவித்தது, அதன் பின்னர் இந்தியப் படங்கள் இனி பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படாது என தடை செய்தனர்.

எதற்கும் அசராத இந்திய அரசின் மீதான அடுத்த தாக்குதலை நடத்தவுள்ளது பாகிஸ்தான், அதாவது இனி பஸ் போக்குவரத்தும் கிடையாது என்று கூறியுள்ளது.