Connect with us

உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பு கவலை அளிக்கிறது: பா ரஞ்சித்

செய்திகள்

உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பு கவலை அளிக்கிறது: பா ரஞ்சித்

இன்று உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் வெளியிட்ட நிலையில் இந்த தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி என்பவர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அதேபோல் கௌசல்யாவின் தாய் விடுதலையை எதிர்த்து காவல்துறையினர் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வரும் நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி,’’காலா’ ஆகிய படங்களை இயக்கிய பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியதாவது:

மிகவும் பதற்றத்தை உண்டாக்கிய உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை நிரபராதிகள் என்று விடுவித்த உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வழக்கை திறன்பட நடத்த இயலாத தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்!!

ஒரு புறம் மேலவளவு வழக்கை போல தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலத்திற்க்கு முன்கூட்டியே விடுதலை செய்கிறார்கள், இப்போது தண்டனை பெறாமலே ஆணவ கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள். தமிழக அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா?

இம்மாதிரியான வழக்குகளின் தீர்ப்பு சமூக தளத்தில் பல நல்லுதாரணங்களை உண்டாக்க வேண்டும் என்பதே அனைவரின் தேவை, எதிர்பார்ப்பு. ஆனால் இந்த வழக்கில் பெற்ற தீர்ப்பு சமூக தளத்தில் உருவாக்கும் மனநிலையை யோசிக்கவே மனம் கவலை கொள்கிறது’

இவ்வாறு இயக்குனர் பா ரஞ்சித், உடுமலை சங்கர் வழக்கு குறித்து கருத்து கூறியுள்ளார்.

Continue Reading
To Top