மோடிக்கு ப சிதம்பரம் பதில்

பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நேற்று பிரதமர் மோடி திருப்பூர் வந்தார். திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோடி, காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார்.

அதிலும் முன்னாள் மத்திய நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை அவர் சாடி பேசினார்.சிலர் இங்கே ரீ கவுண்டிங் செய்து பதவியை பிடித்தனர் என பேசி இருந்தார்.

இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ப.சிதம்பரம் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என திருக்குறளை இதற்காகத்தான் அப்போதே திருவள்ளுவர் சொன்னாரோ என்னவோ என டுவிட் செய்துள்ளார்.

கடந்த 2009ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை தோற்கடித்தார். இருப்பினும் முதலில் ராஜகண்ணப்பன் ஜெயித்ததாகவே அறிவிக்கப்பட்டது. பிறகு ரீ கவுண்டிங் செய்து ப சிதம்பரம் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.

ப.சிதம்பரம் தோற்றதாக முடிவு வெளியான சமயத்தில் காங்கிரஸ் பெரும்பாலான மாநிலங்களில் பெரும்பான்மை பெற்றது. எப்படியும் நாம் ஆட்சி அமைக்க போகிறோம் என காங்கிரஸ் செயல்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவாலும் இந்த ரீ கவுண்டிங் பிரச்சினை விமர்சிக்கப்பட்டது.