Connect with us

சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை சிறந்தது: ப.சிதம்பரம்

செய்திகள்

சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை சிறந்தது: ப.சிதம்பரம்

சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் டெத் குறித்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே பெரும் பரபரப்புடன் பேசிவரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்க சிபிஐயிடம் பரிந்துரை செய்யப்போவதாகவும், நீதிமன்ற அனுமதி பெற்று விரைவில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வரின் இந்த கருத்துக்கு முன்னாள் நிதியமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான ப.சிதம்பரம் கூறியபோது, ‘சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன்

1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதி மன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை. தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது

சிபிஐ குறித்து ப.சிதம்பரம் கூறிய இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளிகள் மற்றும் நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top