பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைகிறாரா ஓவியா!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தமிழில் இது வித்தியாசமான நிகழ்ச்சியாக இருந்தது.

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு வித்தியாசமான பதிப்பாக இருந்தது. பிக் பாஸ் முதல் பாகத்தில் நடிகை ஓவியா, தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். பிக்பாஸின் 2 வது சீசன் ஒளிப்பரப்பானதுபோது கூட, ஓவியாவின் தாக்கம் இருந்து கொண்டே இருந்தது. 

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைகிறாரா ஓவியா!!!

மூன்றாவது சீசன் தொடங்கிய பின்பும், ஓவியாவுடன் கம்பேர் பண்ணும் அளவு ஓவியா மீதான தாக்கம் குறையவில்லை எனலாம்.

தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி ஒளிப்பரப்பாகி வருது. தற்போதைய போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். இந்த சீசன் முற்றிலும் புதுமையாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுகிறது. 

இந்நிலையில், முதல் சீசன் போட்டியாளரான நடிகை ஓவியா மீண்டும் பிக்பாஸ் 3 வீட்டுக்குள் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போ செம காம்பிட்டிஷன்தான் என்று நினைப்பவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே ஆகும். அவர் போட்டியாளராக வரவில்லை, களவாணி 2 ப்ரோமோஷனுக்காக வருகிறார்.