பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா?

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று பாலாஜியும், யாஷிகாவும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் மிக விரைவில் பிக்பாஸ் நாயகி ஓவியா பிக்பாஸ் வீட்டிற்குள் வரவுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஓவியா மறைமுகமாக பிக்பாஸ் வீட்டிற்கு வரவுள்ளதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ஓவியா ஆர்மியினர் சுறுசுறுப்பாகியுள்ளனர். தங்கள் தலைவியின் வருகையை கொண்டாட இப்போதே அவர்கள் தயாராகி வருகின்றனர்.