பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?!

வருடத்துக்கு ஒருமுறை வரும் பொங்கல் வெறும் பண்டிகை அன்று. நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறை, உலகுக்கே சோறுபோடும் உழவருக்கும், அவருக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்வது என பல அர்த்தங்கள் இப்பண்டிகையில் பொதிந்திருக்கு. பொங்கல் பொங்கி வருவதை வைத்தே நாட்டு நலம், வீட்டு நலம் பற்றிலாம் பெரியவங்க சொல்வாங்க. அந்த காலத்தில் மொத்தம் மூன்று நாட்களில் பொங்கல் வைப்பாங்க. இப்ப ஒருநாளில், அதும் குக்கர் பொங்கலா மாறிட்டுது. வாழ்வில் எல்லா நலனையும் கொடுக்கும் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு இன்னும் நல்லது.

பொங்கல் வைக்க உகந்த நேரங்களின் பட்டியல்..


போகி பண்டிகை.
நாள்: 14/01/2019 திங்கள்கிழமை.

பழையன  கழிதலும் புதியன புகுதலும்.. என்னும் வாழ்வியல் தத்துவத்தை எடுத்து சொல்லும் திருநாள் இது. இது இந்திரனுக்காக கொண்டாடப்படும் பண்டிகை. புதியதை வைத்து பூஜை செய்ய வேண்டிய நேரம் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை.

This image has an empty alt attribute; its file name is 4aaa1a0c539cbbec50968b19bb74d7d6-1.jpg

பொங்கல் பண்டிகை
நாள்: 15/01/2019 செவ்வாய் கிழமை.

மழை குறைவில்லாமல் பொழிந்து, பூமியின் செழிப்புக்கு காரணமான இந்திரன், பயிர் நன்கு தானியங்களை விளைவிக்க காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் இவர்களை முன்னிட்டு நடத்தப்படும் பண்டிகை. 1 அல்லது 3 மண்பானை வைத்து பொங்கல் வைப்பது வழக்கம்.

பொங்கல் வைக்க நல்ல நேரம். காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள். அல்லது மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள்.

மாட்டுப்பொங்கல்
நாள்: 16/01/2019 புதன்கிழமை.

நமக்காக உழைக்கும் மாடுகளை வணங்கும் நாள். மாடு இல்லாதவர்கள் மாடுடன் இருக்கக்கூடிய கிருஷ்ணரை வணங்கலாம். மாட்டுப்பொங்கல் வைத்து வழிபட வேண்டிய நேரம் காலை 9.00 மணிக்கு மேல் 10 மணிக்குள்.

வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற அனைவருக்கும் பொங்கல்தின நல்வாழ்த்துகள்