Connect with us

சாத்தான்குளத்தில் மேலும் ஒரு கைதி மருத்துவமனையில் அனுமதி: பரபரப்பு தகவல்

செய்திகள்

சாத்தான்குளத்தில் மேலும் ஒரு கைதி மருத்துவமனையில் அனுமதி: பரபரப்பு தகவல்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் சமீபத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென மர்ம மரணம் அடைந்தார்கள். இந்த மரணங்களின் பரபரப்பு சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டி பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது

இதனை அடுத்து தந்தை மகன் ஆகிய இருவரின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்த இருப்பதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணம் அடைந்த பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக இருந்த மேலும் ஒரு கைதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த ராஜா சிங் என்பவருக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே விசாரணை கைதிகளாக இருந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத சாத்தான்குளம் மக்கள் தற்போது மேலும் ஒரு கைதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்த செய்தியால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Continue Reading
To Top