பிக் பாஸ் வீட்டில் பூத்த மற்றொரு காதல்..!!

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட புதிய கொடூரக் கொலை டாஸ்க் போட்டியாளர்களை கலகலப்பாக்கி வருகிறது. அந்தவகையில், நேற்று முன் தினம் நடந்த இந்த டாஸ்க்கில் வேடிக்கையான முறையில் சாக்‌ஷி மற்றும் மோகன் வைத்தியா கொல்லப்பட்டனர். 

பிக் பாஸ் வீட்டில் பூத்த மற்றொரு காதல்..!!

அதே டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது. அதன்படி, தர்ஷன் ஷெரீனுக்கு முத்தம் கொடுத்து அவரை கொலை செய்தார். அதேபோல, முகின் ராவ் ரேஷ்மா மீது கோல்டு காபியை கொட்டி அவரை கொலை செய்தார்.


இந்த டாஸ்க்கின் இடையே மேலும் ஒரு போட்டி வழங்கப்பட்டது. அதில், அனைத்து போட்டியாளர்களும் கொல்லப்பட்டவர்கள் குறித்த புகழுரையை வாசித்தனர். அதில் சேரன், மதுமிதா, சாண்டி, தர்ஷன் ஆகியோருடைய புகழுரை கலகலப்பாக இருந்தது. குறிப்பாக, மதுமிதாவின் தன்னுடைய புகழுரையில் சாக்‌ஷியை கலாய்த்தார். 


தர்ஷன் ஷெரின் பற்றி நகைச்சுவையாக கூறுகிறேன் என்ற பெயரில் அவர் மீது முதல் நாளே காதல் கொண்ட்தாக கலாய்த்துத் தள்ளிவிட்டார்.