பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை

காலிப் பணியிடங்கள்:

Law Officers  பிரிவில் 25 பணியிடங்களும், Security Officers பிரிவில் 12 பணியிடங்களும், Fire Officers பிரிவில் 01 பணியிடங்களும், Manager Costing பிரிவில் 01 பணியிடங்களும், Economist பிரிவில் 01 பணியிடங்களும், Information System Auditors பிரிவில் 05 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

ஒவ்வொரு பணிக்கும் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.708  மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.118 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.bankofmaharastra.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofmaharashtra.in/downdocs/WEBSITE%20RECRUITMENT%20OF%20SPECIALIST%20OFFICERS111.pdf  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.08.2019