என் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்

அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் கமல்ஹாசன் நடித்த ஸ்வாதி முத்யம் பெயரில் ஒரு மெனு கார்டு உள்ளது அந்த கார்டின் மற்றொரு பகுதியாக என் டி ஆர் நடித்த ராமுடு பெயர் இடம்பெற்றுள்ளது.

கமல்ஹாசன் நடித்தது தெலுங்கில் வெறும் 25 படங்கள் தானாம் அதில் பாதி ஹிட். ஆனால் கமலை விட தெலுங்கில் முன்னணி ஸ்டார்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என பலருக்கு கிடைக்காத கெளரவம் வெறும் 25 படங்கள் அதிலும் பாதி மொழிமாற்றுப்படங்களில் நடித்த கமலுக்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து என் டி ஆருக்கு இணையாக ஒரு ஆந்திர ஓட்டலில் கமலுக்கு மதிப்பு கொடுக்கப்படுவதை நினைத்து அவரின் வெளிநாட்டு ரசிகர்கள் உருகியுள்ளனர்.