Connect with us

ஆட்டநாயகன் விருதை நினைத்துக் கூட பார்க்கவில்லை – பெரியசாமி

விளையாட்டு

ஆட்டநாயகன் விருதை நினைத்துக் கூட பார்க்கவில்லை – பெரியசாமி

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்றது, அந்த இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் சசிதேவ் அதிகபட்ச ரன்களாக 44 ரன்கள் எடுத்தார்.

127 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 114 ரன்கள் மட்டுமே பெற்று திண்டுக்கல் டிராகன்ஸ் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன் விருதை நினைத்துக் கூட பார்க்கவில்லை - பெரியசாமி




டி.என்.எல்.பி.எல் ஆட்டத்தில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார் பெரியசாமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த வெற்றி என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி மற்றும் மகிழ்ச்சியாகும். நான் ஆட்ட நாயகன் விருது பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னால் முடிந்த அளவு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றே எண்ணி இருந்தேன்.


என்னுடைய பந்துவீச்சானது மலிங்கா ஸ்டைலில் இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர், இது எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியே ஆகும், அவர்போல வீச வேண்டும் என்று முயற்சி செய்ததில்லை; அது எனக்கு வரமாக அமைந்து ஒன்று” என்று பெரியசாமி கூறினார்.


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top