Connect with us

நாளை முதல் சென்னையில் வாகனங்களுக்கு தடை: போலீசார் அதிரடி உத்தரவு

செய்திகள்

நாளை முதல் சென்னையில் வாகனங்களுக்கு தடை: போலீசார் அதிரடி உத்தரவு

நாளை முதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட உள்ளதை அடுத்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் வெளியே வரக்கூடாது என போலீசார் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளனர்

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் எந்தவிதமான வாகனங்களும் வெளியே வரக்கூடாது என்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட இருப்பதால் பொதுமக்கள் போலீசாரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் இந்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்தே இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்த முழு லாக்டவுனில் வங்கிகளும் மூடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top