இந்த மாதம் பள்ளி கட்டணம் வாங்க கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைவரும் வேலையின்றி வருமானம் இன்றி இருப்பதால் இந்த மாதம் பள்ளி கட்டணத்தை வாங்க கூடாது என தமிழக அரசின் தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

மேலும் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

தனியார் பள்ளிகளில் வழக்கமாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களின் கட்டணங்களை முன்கூட்டியே வாங்குவதாக கூறப்படும் நிலையில் தமிழக அரசின் தனியார் பள்ளிகள் இயக்குனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.