Connect with us

புதுப்பிக்கபடாத ஆவணங்களா- ஜூன் 30 வரை டோண்ட் ஒரி பி ஹேப்பி

செய்திகள்

புதுப்பிக்கபடாத ஆவணங்களா- ஜூன் 30 வரை டோண்ட் ஒரி பி ஹேப்பி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் டிரைவிங்,லைசென்ஸ், பாஸ்போர்ட் என பலவிதமான டாகுமெண்ட்கள் இந்த வருடம் பிப்ரவரி ,மார்ச்சில் முடிந்தவர்களுக்கு புதுப்பிக்க பட முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இதுபோல அனைத்து டாகுமெண்ட்களுக்கும் தற்போதைய எக்ஸ்பையரி{காலாவதி ஆவது} தேதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சில ஆலோசனைகளை கூறியுள்ளது. கோேரானா பரவுவதை தடுக்க பல்வேறு முடிவுகளை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. பல்வேறு விதமான ஆவணங்கள் புதுப்பிக்க முடியாத அளவுக்கு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சட்டங்களின்படி தகுதிச்சான்று, அனுமதி சான்று (அனைத்து வகை), ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் முடிவடைந்து விட்டால், அவற்றுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி காலாவதியாகிருந்தாலும், ஜூன் 30ம் தேதி காலாவதியாக இருந்தாலும் இரண்டுக்குமே ஜூன் 30 வரை காலாவதி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் ஆவணங்கள் இல்லையே காலாவதியாகி விட்டது புதுப்பிக்க முடியவில்லை என்ற கவலை வேண்டாம்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top