Connect with us

காலாண்டு, அரையாண்டு விடைத் தாள்கள் எங்கே? தனியார் பள்ளிகளின் அதிர்ச்சி பதில்

செய்திகள்

காலாண்டு, அரையாண்டு விடைத் தாள்கள் எங்கே? தனியார் பள்ளிகளின் அதிர்ச்சி பதில்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதமும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண் வழங்க பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது

இந்த நிலையில் காலாண்டு அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதில் ஒருசில தனியார் பள்ளிகள் முறையீடு செய்வதாகவும், பெற்றோர்களிடம் அதிகமாக பணம் வாங்கிக் கொண்டு அதிக மதிப்பெண்களை பதிவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

இதனை அடுத்து அனைத்து தனியார் பள்ளிகளும் காலாண்டு மட்டும் அரையாண்டு விடைத்தாள்களை அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்து இருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு அரையாண்டு விடைத்தாள்கள் பெற்றோர்களுடன் வழங்கப்பட்டு விட்டதாகவும் அந்த விடைத்தாள்கள் தற்போது பெற்றோர்களிடம் இல்லை என தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடியாக பதில் அளித்து உள்ளது

மேலும் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் விடைத்தாள்களை கட்டாயப்படுத்தி கேட்டால் தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த சங்கத்தின் செயலாளர் நந்தகுமார் அவர்கள் கூறியுள்ளார். எனவே பள்ளிகளில் உள்ள காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top