Connect with us

ரோகித்துடன் எந்தப் பிரச்சினையும் இல்லை!! – விராட் கோலி

விளையாட்டு

ரோகித்துடன் எந்தப் பிரச்சினையும் இல்லை!! – விராட் கோலி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அரையிறுதியில் தோற்ற பின், அணிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரோகித்தின் ஆலோசனையை விராட் கோலி ஏற்கவில்லை என்றும் இதனால்தான் பிரச்சினை என்றும் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அவரை பின் தொடர்வதில் இருந்து ரோகித் வெளியேறி இருக்கிறார்.

ரோகித்துடன் எந்தப் பிரச்சினையும் இல்லை!! - விராட் கோலி

விராட் கோலியின் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து முன்பே விலகி விட்டார். ரோகித்தின் மனைவி ரித்திகாவும் அனுஷ்காவை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இவர்கள் பிரச்சினை முற்றியுள்ளதாக தெரிகிறது.

இந்திய வீரர்கள் ராகுல் மற்றும் சாஹல், அதே அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோஹித் அன்பாலோ செய்த பின் புதிதாக பாலோ செய்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகளும் வேகமாக பரவி வருகிறது.

ராகுல் கடந்த ஆண்டுகளில் மோசமாக ஆடினாலும், அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வந்தது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் விராட் கோலி கூறும்பொழுது, நான் கூட இந்த விசயம் பற்றி கேள்விப்பட்டேன்.  இது உண்மையெனில் நாங்கள் விளையாட்டில் சிறப்புடன் செயல்பட்டிருக்க முடியாது.

எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதனை எனது முகத்தில் அல்லது எனது நடவடிக்கைகளில் நீங்கள் காண முடியும்.  நான் ரோகித் பற்றி எப்பொழுதும் புகழ்ந்தே பேசி வந்துள்ளேன்.  எங்களுக்குள் எந்த விவகாரமும் இல்லை.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top