Connect with us

சுடுகாட்டிற்கு செல்ல அனுமதிக்காத அவல நிலை

செய்திகள்

சுடுகாட்டிற்கு செல்ல அனுமதிக்காத அவல நிலை

சடலத்தை கயிறு கட்டி ஆற்றுக்குள் இறக்கி அடக்கம் செய்யும் அவல நிலை ஒரு இடத்தில் நிலவுகிறது என்றால் நம்புவீர்களா? மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை என கிராம மக்கள் பேட்டி அளித்துள்ளனர்..

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரத்தில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாராயணபுர மக்கள் தங்களுக்கு சுடுகாட்டிற்கு இடம் வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு தாக்கல் செய்தும் நடவெடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

நாராயணபுர மக்கள் அந்த ஊரில் இறந்தவர்களின் சடலங்களை பாலாற்றங்கரையில் அடக்கம் செய்வது வழக்கம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் பாலம் கட்டப்பட்டது. இதனால் அதனை சுற்றியுள்ள நில உரிமையாளர்கள் வேலி போட்டு நில ஆக்கிரமைப்பு செய்துள்ளனர். அவ்வழியில் சடலங்களை எடுத்துச் செல்ல நில உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. இதனை தொடர்ந்து கிராம மக்கள் சுடுகாட்டிற்கு போதிய நில வசதி இல்லை என்று அளித்த புகாருக்கு எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு நாராயணபுரத்தை சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். அவரின் சடலத்தை நில உரிமையாளர்கள் அவ்வழியில் எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் கயிறு கட்டி குப்பனின் சடலத்தை ஆற்றுக்குள் இறக்கி அடக்கம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு விரைவில் இட ஒதிக்கீடு செய்யுமாறு கிராம மக்கள் வலியுறித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top