Connect with us

ஜூன் 30க்கு பின் பயணிகள் ரயில்கள் இயங்குமா? ரயில்வேதுறை தகவல்

செய்திகள்

ஜூன் 30க்கு பின் பயணிகள் ரயில்கள் இயங்குமா? ரயில்வேதுறை தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பேருந்துகள் ரயில்கள் விமானங்கள் இயக்கப்படாமல் மல் இருப்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு ரயில்களை மட்டும் இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. மற்றபடி பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிவடைவதால் ஜூலை 1 முதல் பயணிகள், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயங்க வாய்ப்பு இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை எக்ஸ்பிரஸ், பயணிகள், புறநகர் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சிறப்பு ராஜதானி, சிறப்பு விரைவு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது

மேலும் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஜூன் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்தாலும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை எந்தவிதமான ரயில் போக்குவரத்தும் இல்லை என்பது இந்த அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது

Continue Reading
To Top