Connect with us

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை: அமைச்சர் அதிரடி பேட்டி

செய்திகள்

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை: அமைச்சர் அதிரடி பேட்டி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி டாஸ்மாக் கடைகளை குறைக்க வில்லை என எதிர்க்கட்சிகள் சமீபத்தில் குற்றச்சாட்டினர். இது குறித்து திமுக தலைவர் சட்டசபையிலும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் அமைச்சர் தங்கமணி அவர்கள் அளித்த பேட்டியில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கப்பட்டு தான் வருகிறது என்றும் 6215 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில் தற்போது 5262 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தொடர்ந்து மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்

இதனை அடுத்து வரும் காலங்களில் 5000 குறைவான டாஸ்மாக் கடைகள் தான் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top