Connect with us

விஜய் சாதனையை முறியடிக்க தவறியதா ‘காலா?

பொழுதுபோக்கு

விஜய் சாதனையை முறியடிக்க தவறியதா ‘காலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சில மர்ம நபர்கள் நேற்றிரவே டீசரை இணையத்தில் கசியவிட்டதால் வேறு வழியின்றி நள்ளிரவு 12 மணிக்கு தனுஷின் டுவிட்டர் பக்கத்தில் டீசர் வெளியானது.

இந்த நிலையில் ‘காலா’ படத்தின் டீசர் எதிர்பாராமல் திடீரென வெளிவந்ததால் விஜய்யின் ‘மெர்சல்’ டீசரின் சாதனையை முறியடிக்க தவறியுள்ளது. மெர்சல் டீசர் வெளியான 6.30 மணி நேரத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்தனர். ஆனால் ‘காலா’ டீசரை அதே 6.30 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

அதேபோல் மெர்சல் பட டீசர் வெளியான பத்தே நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இந்த சாதனையையும் காலா முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top