Connect with us

அரசு அனுமதிக்கும் வரை மாணவர் சேர்க்கை கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

செய்திகள்

அரசு அனுமதிக்கும் வரை மாணவர் சேர்க்கை கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் நிலையிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி கட்டண கொள்ளையை நடத்தி வரும் தனியார் பள்ளிகள் சில, தற்போது 11ஆம் வகுப்பு உள்பட ஒருசில பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும் திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என்றும், மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை உடனடியாக நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

கொரோனா வைரஸ் நேரத்திலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது, அந்த சேர்க்கைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்வது குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top