Connect with us

அம்மா உணவகங்களில் இனி இலவச உணவு இல்லை..!!

செய்திகள்

அம்மா உணவகங்களில் இனி இலவச உணவு இல்லை..!!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் சிறு, குறு தொழில்கள் உட்பட பலவும் பாதிக்கப்பட்டன.

இதனால் மக்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகையில், ஆங்காங்கே தன்னார்வலர்கள் உணவு மற்றும் பண உதவிகளை செய்து வருகின்றனர், அந்தவகையில் அரசாங்கம் சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் பணம் வசூலிக்காமல் இலவசமாக உணவினை வழங்கி வந்தது.

அம்மா உணவகங்களில் இனி இலவச உணவு இல்லை..!!

இதன்மூலம் ஏழை, எளிய மக்கள், ரோட்டோரங்களில் வசிப்போர், முதியவர்கள், ஆதரவற்றவர்கள் எனப் பலரும் பெரிய அளவில் பயன் அடைந்தனர். பல ஆயிரக்கணக்கிலான மக்கள் இலவசமாக அம்மா உணவகங்களில் உணவு பெற்று வந்தனர்.

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் காலை, மதியம், இரவு உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டதை தற்போது நிறுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி துவங்கிய இந்த சேவையின்மூலம் சென்னையில் 1 கோடியே 36 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியினை சந்தித்துள்ளது.

Continue Reading
To Top