Connect with us

சம்பளம் போட கூட பணம் இல்லை: மத்திய அரசிடம் உதவி கேட்ட துணை முதல்வர்

செய்திகள்

சம்பளம் போட கூட பணம் இல்லை: மத்திய அரசிடம் உதவி கேட்ட துணை முதல்வர்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்பதால் உடனடியாக மத்திய அரசு 5,000 கோடி ரூபாய் நிதி உதவி செய்ய வேண்டும் என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அவர்கள் கேட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லி மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாய் 85% முடங்கி விட்டதாகவும் இதனையடுத்து மத்திய அரசின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதி இருந்தார்

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ’அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட மற்றும் நிர்வாகச் செலவுக்கு பணம் இல்லை என்றும் எனவே மாதம்தோறும் 3500 கோடியில் இதற்காக மட்டுமே தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி வரி ரூபாய் 1000 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்து தற்போது 5000 கோடி ரூபாய் டெல்லி அரசுக்கு, மத்திய நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூட பணம் இல்லை என்று துணை முதலமைச்சர் ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading
To Top