Connect with us

ஊரடங்கு இனி இல்லை, வெறும் கட்டுப்பாடுகள் மட்டுமே: விரைவில் அறிவிப்பு என தகவல்

செய்திகள்

ஊரடங்கு இனி இல்லை, வெறும் கட்டுப்பாடுகள் மட்டுமே: விரைவில் அறிவிப்பு என தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி அதாவது நாளை உடன் முடிவடைந்ததை அடுத்து ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை சற்றுமுன் முடிவடைந்த நிலையில் பேட்டி அளித்த மருத்துவர் குழுவினர் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பரிந்துரை செய்ததாகவும் தெரிவித்தனர்

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் அதிதீவிரமாக கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முழு ஊரடங்கு தேவையில்லை என்ற மருத்துவ குழுவின் பரிந்துரையை அரசு ஏற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன

மேலும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஊரடங்கு இல்லை என்று அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சேலம், தேனி மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
To Top